மெக்சிகோவில் பதற்றம்…! இரு கும்பல்களிடையே ஏற்பட்ட மோதல்

0

மெக்சிகோவின் ஜுவாரஸ் (Juarez) நகரில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 11 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஜுவாரஸில் உள்ள சிறையில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

அதனைதொடர்ந்து சிறைக்கு வெளியே அந்த 2 கும்பல்களைச் சேர்ந்தவர்களும் கடைகளை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here