மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.
புனித ஸ்தலமான திலா பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவலாயத்திற்கு சென்றவர்கள்.
தபாஸ்கோ நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது சியாபாஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.