மெக்சிகோவில் இரு கனேடியர்கள் படுகொலை…. பொலிஸார் தீவிரம்

0

இரண்டு கனேடியர்கள் மெக்சிகோவின் கரீபியன் கடற்கரை ரிசார்ட் பிளாயா டெல் கார்மெனில் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் இன்டர்போலால் தேடப்பட்டவர் என கூறப்படுகின்றது.

ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அல்லது சொந்த ஊர்கள் குறித்த உடனடி தகவல் எதுவும் இல்லை.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

யாருடைய அடையாளம் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஒருவர் இன்டர்போலால் தேடப்பட்டார்.

அவர் ஒரு சுற்றுலாப் பயணி அல்ல.

அந்த நபர் மெக்சிகோவில் சுமார் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

குயின்டானா ரூ அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இருவருக்கும் கத்தியால் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தின் போது மூன்றாவது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவர்கள் கனேடிய குடிமக்கள் என்பதை மெக்சிகோவில் உள்ள கனடா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here