மூளையில் இரத்தக்கட்டிகள்…… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்….

0

ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆகவே, அது தொடர்பில் ஜேர்மன் சுகாதார அமைச்சகம், Paul Ehrlich நிறுவனத்தின் பரிந்துரையின்பேரில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதுவரை ஏழு பேருக்கு மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது அறிவியல் பூர்வமான முடிவு, அரசியல் பூர்வமான முடிவு அல்ல என்று கூறியுள்ள Jens Spahn, நாங்கள் Paul Ehrlich நிறுவனத்தின் பரிந்துரையின்பேரில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

ஏற்கனவே, அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு தடை விதித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here