மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய் கைது….

0

இரவுப்பணி முடிந்து லாஸ் ஏஞ்சல்சிலுள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்த பெண் ஒருவர், அங்கே தனது மூன்று பேரக்குழந்தைகளும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துகிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டில் குழந்தைகளுடன் இருந்த தாயான லிலியானா காரில்லோ 30 வயது மாயமாகியிருப்பதைக் கண்டு அவரைத் தேடுவதற்காக தங்கள் சக பொலிசாரை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் தனது காரை எடுத்துக்கொண்டு தப்பிய லிலியானா, அதை ஓரிடத்தில் விட்டு விட்டு, அங்கிருந்து வேறொரு காரைத் திருடிக்கொண்டு தப்பியோடும்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

லிலியானாவுக்கு ஏற்கனவே கடுமையான மன நலப் பிரச்சினைகள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது கணவரான எரிக்கின் உறவினர் டெரி மில்லர் தெரிவிக்கையில் எரிக் எப்படியாவது குழந்தைகளை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள படாதபாடு பட்டிருக்கிறார்.

அரசு குழந்தைகளை அவற்றின் தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காததால், எரிக் தன் குழந்தைகள் மூவரையும் இழந்துவிட்டிருக்கிறார்.

பொலிசார் தொடர்ந்து லிலியானாவை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here