மூன்றாவது முறையாக கனேடிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈழத் தமிழர்

0

கனடாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படியில் மீண்டும் பெரும்பான்மையில்லாத அரசாங்கம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

Scarborough—Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 20,889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆனந்தசங்கரி 2015ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிருகின்றார். 2019 ஆம் ஆண்டு, அவர் 62.2 சதவீத வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here