மூன்றரை வயது பெண் குழந்தை கொரோனாவுக்கு பலி

0

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ எட்டியுள்ளது.

இந்த நிலையில், அம்பலங்கொடை – தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ,குறித்த குழந்தை இதற்கு முன்னர் லியுகேமியா நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உயிரிழந்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் காலி, தடெல்ல தகன மேடையில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here