முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுவதாக கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

0

ஈழ தமிழ் மக்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதை போன்று தற்போது முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு இன்று நிவாரண உதவிகளை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம், தமது பிழைகளையும் மோசடிகளையும் மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here