முழுமையாக முடக்கப்பட்ட தென் பசிபிக் நாடான டொங்கா

0
HMAS Adelaide sits alongside Nuku'alofa to deliver humanitarian stores and medical supplies as part of OP TONGA ASSIST 22. *** Local Caption *** The Australian Defence Force is providing support to the government of Tonga, following the eruption of underwater volcano Hunga Tonga-Hunga Ha’apai on 15 January and the subsequent tsunami. The Department of Defence has established Operation TONGA ASSIST 22 as part of a Whole of Australian Government effort coordinated by the Department of Foreign Affairs and Trade (DFAT).

தென் பசிபிக் நாடான டொங்கா, முழு முடக்கத்தை அறிவித்துள்ளது

தலைநகர் நுகுஅலோஃபாவில் (Nuku’alofa) இரண்டு புதிய கொவிட் நோயாளர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் எரிமலை வெடிப்பு மற்றும் ஆழிப்பேரலை ஆகிய அனர்த்தங்களைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் தரையிறக்கப்பட்ட துறைமுகத்தில் இரண்டு கொவிட் நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் பசிபிக் நாடான டொங்கா முன்னர் கொவிட் வைரஸ் இல்லாத நாடாக இருந்தது.

இந்நிலையில், இரண்டு புதிய கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதையடுத்து, தற்போது அமுலாகின்ற முடக்கம், இரண்டு நாட்களின் பின்னர் மதிப்பாய்வு செய்யப்பட்டு மீள அறிவிப்பு செய்யப்படும் என அந்தநாட்டின் பிரதமர் சியோசி சொவலணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here