முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கிடைத்த அனுமதி! முறுகலில் ஈடுபட்ட பொலிஸார்

0

பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் வழங்கிய கடடளையின் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட சிலர் குறித்த இடத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் முற்றுமுழுதாக பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்த நிலையில் குறித்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது சட்டத்தரணி அவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை விளங்கப்படுத்தி இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பு தங்களுடைய கைக்குக் கிடைக்கவில்லை எனவும் ஏற்கெனவே கிடைத்த தீர்வுகளே தம்மிடம் உள்ளதாகவும் இந்த இடத்தில் சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒன்று கூட முடியாது எனவும் திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here