முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடையுத்தரவைப் பெற்ற பொலிஸார்!

0

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள். கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஏ.ஆர் 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட மக்களை நினைவேந்தி முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் மே 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.

இன்னிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் பொது நினைவுக்கல் ஒன்றினை நடுகை செய்ய கொண்டு சென்றவேளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன் குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளிட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here