முல்லைத்தீவில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீர் மரணம்

0

முல்லைத்தீவில் விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வள்ளுவர்புரம் – றெட்பானா, புதுக்குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 அகவையுடைய செனவிரத்தின சமரக்கோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் வாய் மற்றும் மூக்கினால் இரத்தம் வடிந்த நிலையில், சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூலித்தொழில் செய்து வரும் இவர் றெட்பான சந்திக்கு அருகில் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here