முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மூவர்

0

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.

நேற்று (15)மாலை வேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்துவந்துள்ளது.

குமுழமுனை பகுதியனை சேர்ந்த இரு விவசாயிகளும்,கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.

இரவாகியும் இவர்கள் விடு திரும்பாத நிலையில் இவர்களை தேடி உறவினர்கள் விவசாயிகள் சென்றவேளை வயல் நிலத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here