முல்லைத்தீவில் பரிதாபமாக பலியான இளைஞன்

0

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டானிலிருந்து மற்றொருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு நோக்கிப் பயணித்தபோதே விபத்து நிகழ்ந்துள்ளது.

வீதியின் குறுக்காக சடுதியாகப் பயணித்த எருமை மாட்டுடன் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here