முல்லைத்தீவில் தனிமையில் வசித்து வந்த இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

0

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கணவனை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 32 வயதான பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here