மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் அதிரடி ஆட்டக்காரர்!

0

மும்பை அணிக்கு ரிசவர்வ் பிளேயராக நியூசிலாந்து அணி வீரர் ஸ்காட் குகலீஜ்னை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இவ்வருடம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், மும்பை சற்று தடுமாறி வருகிறது.

இந்நிலையில் கடந்த போட்டிகளில் மும்பை அணி கடைசி கட்டத்தில் தொடர் வெற்றிகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மும்பை அணி வீரரும், நியூசிலாந்து அணி வீரருமான ஜேம்ஸ் நீச்சம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்காட் குகலீஜ்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மும்பை அணி தற்போது டெல்லியில் உள்ளது.

அடுத்த நான்கு போட்டிகளும் டெல்லியில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஜேம்ஸ் நீச்சம் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால், மும்பை அணி ஸ்காட் குகலீஜ்னை ஒரு ரிசர்வ் பிளேயராக இருப்பார் என கருதப்படுகின்றது.

நியூசிலாந்து அணி வீரரான cott Kuggeleijn இதுவரை 16 டி20 போட்டிகள் விளையாடி, அதில் 79 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அவரின் பேட்டிங் சராசரி 19.75-ஆக இருந்தாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 213.51-ஆக உள்ளதால், இவரும் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here