மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து….

0

இந்தியா, மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் கோவண்டி பகுதியிலேயே இந்த அனர்த்தம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here