முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் 40 மனித சடலங்கள்…அதிர்ச்சியில் அதிகாரிகள்

0

லத்தீன் அமெரிக்க நாடான எல்சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் குறைந்தது 40 மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவை பெண்களுடையவை என கூறப்படுகின்றது.

புதைகுழியில் அனைத்து உடல்களையும் மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவில் பெண்ணியக்கொலைக்கான மிக உயர்ந்த விகிதத்தை எல்சல்வடோர் கொண்டிருக்கிறது.

பெண்கள் அல்லது சிறுமிகள் பாலியல் வன்முறையின் பின் கொலை செய்யப்படுவது அங்கு வழக்கமான விடயமொன்றாகும்.

தலைநகர் சன் சல்வடோர் நகரில் உள்ள பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ்(Hugo Ernesto Osorio Shavish).

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்று சன் சல்வடோர் நகரில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஹல்ஷுபா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஹ்யூகோ எர்னஸ்டோ ஒசோரியோ சாவேஸ்(Hugo Ernesto Osorio Shavish) பணியாற்றிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பலர் மாயமாகியுள்ளனர்.

இது தொடர்பாக ஹிஹோ மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

51 வயதான ஹ்யூகோ எர்னஸ்டோ ஒசோரியோ சாவேஸ், 57 வயதான ஒரு பெண்ணையும் அவரது 26 வயது மகளையும் கொலை செய்ததற்காக இந்த மாதம் சல்ச்சுவாபா நகரில் தடுத்து வைக்கப்பட்டார்.

அதற்கு முன்னதாக பாலியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்ட முன்னாள் அதிகாரி, இந்த ஜோடியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து தடயவியல் குழுக்கள் தலைநகர் சான் சால்வடாரிலிருந்து வடக்கே சுமார் 48 மைல் தொலைவில் அவரது வீட்டில் தேடியபோது, ​​உடல்கள் அடங்கிய குறைந்தது ஏழு குழிகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு ஒரு கொலை வளையம் இருப்பதை ஒரு தசாப்த காலமாக நீடித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, கல்லறைகளில் ஒன்றிலிருந்து எட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை தீர்மானிக்க டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இதுவரை குறைந்தது 24 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here