முன்னணி பி.ஆர்.ஓ திடீர் மறைவு

0

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜூ அவர்கள் திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் காலமாகி வருவது காரணமாக அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகினர் தற்போது பிஆர்ஓ ராஜூ அவர்களின் மறைவால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

பி.ஏ.ராஜூ அவர்கள் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் திரைப்படங்களின் புரமோஷன்களையும் சிறப்பாக கவனித்து வந்தவர் என்பதும் தெலுங்கு திரையுலகிற்கு அவர் முக்கிய பணி ஆற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜூ காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிஆர்ஓ ராஜு அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here