கொரோனா வைரசினால் உலகம் முழுவதும் சுமார் 510 மில்லியன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஒரு சில நாடுகளில் மட்டும் இந்த தொற்று ஏற்படவில்லை.
அதில் வடகொரியாவும் ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் வடகொரியாவில் முதல் முறையாக நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அவரச ஆலோசனைக்கு பிறகு, தேசிய அளவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி, ‘மிகக் குறுகிய காலத்திற்குள் வேரை அகற்றுவதே குறிக்கோள்.
மக்களின் அதிக அரசியல் விழிப்புணர்வின் காரணமாக அவசரநிலையை சமாளித்து அவசரகால தனிமைப்படுத்தல் திட்டத்தை வெல்வோம்’ என கிம் உறுதியளித்துள்ளார்.
மேலும், கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மட்டும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு கிம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் உள்ள தங்கள் பகுதிகளை முழுமையாக தடுப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுக்கலாம் என கிம் தன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.