முதல் முறையாக குழந்தையை பாதித்த குரங்கம்மை தொற்று!

0

ஜேர்மனியில் முதல் முறையாக நான்கு வயது பெண் குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு பெரியவர்களுடன் வாழ்ந்த அந்த சிறுமிக்கு வைரஸ் தொற்று இருப்பதை ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஆனால் தற்போது அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கம்மை தொற்று பரவுவதை உறுதி செய்தது.

ஜேர்மனியில் இதுவரை 2,900 குரங்கம்மை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குரங்கம்மை தொற்றுநோயைத் தடுக்க, தடுப்பூசி பிரச்சாரத்தை நாடு தொடங்குவது முக்கியம் என்று ஜேர்மனியின் சுகாதார நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் RKI-யிடம் 40,000 டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசி இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், மேலும் 200,000 டோஸ்களை ஆர்டர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here