முதல் கொரோனா மரணத்தை பதிவு செய்த வடகொரியா..!

0

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா பெருந்தொற்று பரவதொடங்கி, உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்தது.

இந்நிலையில், வடகொரியா மட்டும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என தெரிவித்து பிற நாடுகளுடனான அனைத்து தொடர்பையும் துண்டித்தது.

இதையடுத்து தற்போது உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் வடகொரியா தனது முதல் கொரோனா பெருந்தொற்று மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வடகொரியாவில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து காரணத்தை கண்டறிய முடியாத காய்ச்சல் ஒன்று பரவத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவில் பல்லாயிரக்கணக்கானோர் காய்ச்சல் அறிகுறிகளை அனுபவித்து வருவதாகவும் அதில் 6 நபர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.

அவற்றில் ஒருவருக்கு ஓமிக்ரான் சோதனையில் நேர்மறை முடிவு இருந்தாகவும் மாநில அரசு ஊடகங்க தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 350,000 பேர் அந்த காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு இருப்பதாகவும் இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடகொரியாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் அறிகுறிகளை தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் முதல்முறையாக முககவசத்துடன் அந்த நாட்டின் தொலைகாட்சியில் தென்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here