முட்புதருக்குள் வீசி எறியப்பட்ட தாய்…! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!

0

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.

இந்த முட்புதரில் பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது இரண்டு கால்கள் செயலிழந்த மூதாட்டியை முட்புதருக்குள் வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அவரை மீட்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பொலிசார் குறித்த முதியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை மணலி பெரியசேக்காடு கிராமத்தை சேர்ந்த காந்திமதி 85 வயது என்பது தெரியவந்துள்ளது.

இவரது மூத்த மகன் ரவி கொத்தனார் வேலை செய்து வருகின்றார்.

இளைய மகன் சங்கர் வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் தாயை ஏற்றி இவ்வாறு முட்புதறில் வீசிவிட்டு சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.

பெற்ற மகனே வயதான கால்கள் செயலிழந்த தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here