முட்டைகளில் நோய்க்கிருமிகள்… பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை…!

0

பிரான்ஸில் குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளில் முட்டைகள் வாங்கியவர்கள் அவற்றை உண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

E.Leclerc பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட முட்டைகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்பொருள் அங்காடிகளில் முட்டைகள் வாங்கியோர் அவற்றை வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த சால்மோனெல்லா கிருமியால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்களை உண்டால் ஆறு முதல் 72 மணி நேரத்திற்குள் வாந்தி முதல் வயிற்றுப்போக்கு வரையிலான பல்வேறு உபாதைகள் ஏற்படும்.

குறிப்பாக, இளம் சிறார் சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடுகள் கொண்டோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருவேளை பாதிக்கப்பட்ட முட்டையை நீங்கள் சாப்பிட்டிருந்தால், உங்களுக்கு அறிகுறிகள் தோன்றுமானால், உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.

பொதுவாக, 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சமைக்கப்படும் முட்டைகளில், இந்த கிருமிகள் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here