முச்சக்கரவண்டியுடன் பாரவூர்தி மோதி விபத்து! பெண் ஒருவர் பலி

0

நுவரெலியா – ஹட்டன் வீதியில் தலவாக்கலை, டெவோன் பகுதியில் இன்று 23 ஆம் திகதி காலை முச்சக்கரவண்டியொன்றும் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக திம்புள்ள-பத்தன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மருந்துகளை எடுத்துச்செல்வதற்காக கொழும்பிற்கு பயணித்த பாரவூர்தியுடன் கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் முச்சக்கரவண்டியின் ஓட்டுநருக்கு காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினால் உயிரிழந்த பெண்ணின் உடல் கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் ஓட்டுநருக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை திம்புள்ள-பத்தன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here