முகத்தில் பல வண்ணங்களில் பச்சை குத்திய வினோத இளைஞர்!

0

ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றியுள்ளார்.

இவர் அவரது முகத்தில் “jigsaw puzzle” போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் பச்சை குத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி காது மற்றும் மூக்குகளில் துவாரங்களிட்டு அணிகலன், தனது இரு கண்களுக்கும் சாயம், பற்களுகளின் இரு வரிசைகளுக்கும் டைட்டானியத்தால் ஆன மேற்பூச்சு மற்றும் தனது நாக்குகளை இரண்டாக பிளந்து, பாம்பின் பிளவுபட்ட நாக்கு போல் வினோதமாக மாற்றியுள்ளார்.

28 வயதானஅந்த இளைஞர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Black Depression’ எனும் பக்கத்தில் அந்த தனது வினோதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “உடலில் மாற்றம் செய்வதில் எனக்கு நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்தது.

நான் விரும்பியபடியே என்னால் என் உடலை மாற்ற இயலும்.

மற்றவர்கள் உடலில் செய்யும் மாற்றத்தை போல் அல்லாமல், நான் உடல் மாற்றத்தில் தனித்துவத்தினை காட்டி என்னை பார்த்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் தொடர்பில் இணையத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here