முகக் கவசம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கொரோனா தொற்றுக்கு எதிராக முககவசம் அணிவது உலகளவில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட காலமாக முகக் கவசம் அணிவதனால் முகத்தில் தோல் நோய் ஏற்படும் ஆபத்துக்கள் ஏற்படும் என விசேட வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.

அடர்த்தியான நிறங்களில் உள்ள முகக் கவசம் அணிவதை தவிர்த்து வெளிர் நிறங்களில் உள்ள முகக் கவசங்களை அணிய நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகக் கவசம் அணியும் போது முகத்தில் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு செல்லுமாறு வைத்தியர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here