முகக் கவசங்கள் அணிவது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்…..

0

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றின் தீவிரம் காரணமாக இரு முகக்கவசம் அணிவது நன்மையளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது பொறுத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முகக் கவசத்தை சரியான முறையில் அணிவது மாத்திரமே அவசியமாகும்.

ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது ஏற்புடையதல்ல.

உள்ளே ஒரு செர்ஜிகல் முகக் கவசம் வெளியே ஒரு N95 முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறையும் ஏற்கத்தக்கது அல்ல.

நாம் அணிந்திருக்கும் ஒரு முகக கவசம் முகத்தை மறைத்து நன்கு இறுக்கமாக உள்ளதா என்பதனையே உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு இறுக்கமாக இல்லை என உணர்ந்தால் மாத்திரம் வெளியே ஒரு துணி முகக் கவசத்தை அணியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here