முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக பொலிசாரின் புதிய நடவடிக்கை

0

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிசார் வீதியில் பயணிப்போர், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வாகனங்கள் என்பவற்றை மறித்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முகக்கவசம் அணியாதோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் பொலிசாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here