உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் வீடு, அலுவலகம், உணவகம் என எங்கு இருந்தாலும் நாம் உணவு உட்கொள்ளும் நேரத்தில் முகக்கவசத்தை நிச்சயமாக கழற்றி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டு விஞ்ஞானிகள் முகக்கவசம் போலவே மூக்கு கவசத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆனால், மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முகக்கவம் போலவே மூக்கில் மட்டும் அணிவதற்கென்று ஒரு கவசத்தை உருவாக்கியுள்ளனர்.
உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் வேளையில் பாதுகாப்பாக இருக்க முக்குப் பகுதியை மட்டும் மறைக்கும் ஒரு சிறிய மூக்கு கவசத்தை தயாரித்துள்ளனர்.
மூக்கில் உள்ள வாசனை உணர்வைத் தரும் செல்கள் கொரோனா வைரஸுக்கு ஒரு முக்கிய நுழைவு புள்ளி என்றும் அதனால் இந்த மூக்கு கவசத்தை அணிவது பாதுகாப்பை தரும் என்று Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.