முகக்கவசத்தை அகற்றி பொலிசாரை நோக்கி இருமிய தமிழருக்கு நேர்ந்த கதி!

0

முகக்கவசத்தை அகற்றி பொலிசாரை நோக்கி இருமிய தமிழருக்கு நேர்ந்த கதி!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகின்றார்.

இவர் தனது தோழியை தாக்கியதற்காக பொலிசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது.

அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பொலிசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காமல் தனது முகக்கவசத்தை அகற்றி, பொலிசாரை நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளும் பேசியுள்ளார்.

இதனால், இது அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here