பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானம்!

0

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று சனிக்கிழமை(01) தெரிவித்தார்.

ஏற்கனவே ஒருவார காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் அடுத்தவாரம்-03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை நடத்துவது உசிதமில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும்- 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும்-07 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here