மீண்டும் முடக்கப்படுமா பிரித்தானியா…? பிரதமரின் முக்கிய தகவல்

0

பிரித்தானியாவில் கொவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர் வரும் ஜனவரிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டடுள்ளார்.

பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் ஒமிக்ரான் வைரஸ்சுக்கு எதிரான ஆற்றலை உடலில் பெருக்கிக் கொள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய மாறுபட்ட வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை ஏற்படாது.

அதேநேரம் மக்கள் குழுக்களாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டாயம் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here