மீண்டும் முடக்கப்படுமா இலங்கை…? அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசு

0

இலங்கையில் தற்போது 11,928 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளருடன் நெருங்கி செயற்பட்டவர்களை பரிசோதனை செய்யப்பட்டு வருகினறது.

அதற்கான அறிக்கை எதிர்வரும் 2 நாட்களுக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய மேலதிக திட்டங்களை நடைமுறைப்படுத்த விசேட கூட்டம் இன்று இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாட்டை முழுமையாக மூடாமல் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை இதுவரையில் இடம்பெறவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here