மீண்டும் மான்செஸ்டர் அணியில் ரொனால்டோ! முதல் ஆட்டத்திலேயே அசத்தல்

0

மீண்டும் தன் பழைய அணியான மான்செஸ்டருக்கு திரும்பிய ரொனால்டோ முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்துள்ளார்.

உலக கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வரும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போர்ச்சுக்கல் நாட்டு விளையாட்டு வீரரான இவர் க்ளப் ஆட்டங்களில் தொடர்ந்து ஆடி வருகிறார்.

நேற்று மான்செஸ்டர் யுனிடெட் – நியூ கேஸ்டில் இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மீண்டும் களம் இறங்கிய ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார்.

மான்செஸ்டர் அணிக்கு இதோடு 120 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற ரீதியில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here