மீண்டும் பிரதமாகின்றாரா மஹிந்த?

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளமையானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here