மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம்

0

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நான்கு தலைமுறைகளாக திரைப்படங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியது

இம்முறை ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர்களை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனம் மற்றும் சோனி லைவ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் வெப்தொடரை ‘ஈரம்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏவிஎம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளதை அடுத்து ஏவிஎம் நிறுவனத்திற்கு திரையுலக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தமிழ் திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக ஒழிக்க முடியாமல் இருக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாக வைத்து ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகி வருவதாகவும் சோனி ஓடிடி தளத்தில் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here