மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையில் விமான சேவை!

0

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாண உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்க சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி உள்நாட்டு விமான சேவை நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு விமான சேவை வாரத்துக்கு இரு தடவைகள் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு இயக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாளாந்தம் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய விமான சேவைகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here