மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா …?

0

இந்தியாவில் இந்தாண்டு 14-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் இங்கு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், வரும் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19-ம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடந்த வாய்ப்புள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் சனிக்கிழமை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here