மிளகு சேனைக்குள் அனுமதியின்றி நுழைந்த நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

0

மாத்தளை, இரத்தோட்டை, பொல்வத்த பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதேசத்திலுள்ள மிளகு சேனைக்குள் அனுமதியின்றி நுழைந்த நபரொருவரே இவ்வாறு, குறித்த சேனையின் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்று (08) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் காவல்நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here