யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை(18.10.2021) காலை நடந்துள்ளது.
பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ்.நகர் நோக்கிப் பயணித்துள்ளது. இதன்போது கூட்டமாகப் பயணித்த மாடுகளைக் குறித்த புகையிரதம் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.