மிரிஹான ஆர்ப்பாட்டம்; ஊடகவியலாளர்கள் உட்பட பலர் படுகாயம் – வாகனங்கள் தீக்கிரை

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பொலிசார் என பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போதே காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த மேலும் நால்வர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here