மிரட்டலான சிம்புவின் வெந்து தணிந்தது காடு

0

‘வெந்து தணிந்தது காடு’ படம் ‘ரவுடியிசம், தாதா, கேங்ஸ்டர்’ வகை படத்தை சேர்ந்தது.

ஆனால், கவுதம் வாசுதேவ் மேனன் ஸ்டைல் படம்.

தென் தமிழ்நாடு பக்கம் இருந்து பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு ஒரு தாதாவாக வளரும் வரையில் ‘முத்து’ என்ற ஒரு இளைஞனின் வாழ்வியல் கமர்ஷியல் ஆக்ஷன் படம்.

முதல் பாதி வரை ஊரிலிருந்து புறப்பட்டு மும்பை சென்று பரோட்டா கடையில் வேலைக்குச் சேர்ந்த முத்துவின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பாதியில் ஒரு தாதாவுக்கு ‘பாடிகார்ட்’ ஆக வளர்ந்து நிற்கும் அதே முத்துவின் ஆக்ஷனை சராசரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கவுதம்.

முத்து என்கிற முத்துவீரன் ஆக மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு. ஊர்ப் பையனாக ஒரு ஏழை இளைஞனாக அதற்கான உடல் மொழி, நடை, உடை, பாவனை என தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு சிம்பு இப்படியெல்லாம் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஒரு இடத்தில் கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பு, கதாபாத்திரம் மனதிற்குள் வரவில்லை.

முத்து என்கிற ஒரு தென் தமிழ்நாடு இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

நெல்லைத் தமிழ்ப் பேச்சு, தாங்கித் தாங்கி நடப்பது போல ஒரு நடை, அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது என நிறையவே கதாபாத்திரத்தை உள் வாங்கியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம்.

ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார்.

மும்பையில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என ரவுடியிச வேலைகளைச் செய்பவர்களுக்கு நடக்கும் போட்டிதான் படத்தின் மையக்கரு.

ஒரு கூட்டம் தமிழர்கள், மற்றொரு கூட்டம் மலையாளிகள்.

அதில் தமிழர்கள் கூட்டத்திற்காக வேலை செய்பவராக மாறுகிறார் சிம்பு.

அந்தக் கூட்டத்தின் தலைவனாக புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

மலையாளிகள் கூட்டத்தின் தலைவனாக சித்திக். இவரும் மிரள வைக்கிறார்.

சிம்புவின் காதலியாக சித்தி இத்னானி.

இவருக்கும் இடையில் அதிகமான காதல் காட்சிகள் இல்லையென்றாலும் காதலை அழுத்தமாக வெளிப்படுத்தும் காட்சிகளாக அமைந்துள்ளன.

சித்தியின் நடிப்பும் சிறப்புதான். புதுமுகம் என்று சொல்ல முடியாத நடிப்பு.

அப்புக்குட்டி, நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் அவர்கள் கதாபாத்திரங்களைப் பற்றி பேச வைக்கிறார்கள்.

‘மறக்குமா நெஞ்சம்…’ என மறக்க முடியாத பாடலைப் பதிவு செய்துள்ளார் ஏஆர் ரகுமான்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு மும்பையை புதிதாகக் காட்டுகிறது.

ராஜீவனின் புரொடக்ஷன் டிசைன் படத்திற்கு மிக முக்கியமானது.

உத்தரா மேனனின் ஸ்டைலிங், காஸ்ட்யூம்ஸ் சிம்புவை மாற்றியதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இடைவேளைக் காட்சிக்கு தியேட்டரில் அப்படி ஒரு கைத்தட்டல். அது போல் மேலும் சில காட்சிகள் புதிதாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

சில காட்சிகள் இப்படித்தான் அடுத்து நகரும் என யூகிக்க முடிவது மைனஸ்.

ஆனாலும், கவுதம் மேனனின் மேக்கிங் ஸ்டைலும், சிம்புவின் நடிப்பும் படத்தைக் காப்பாற்றுகிறது.

சிம்பு ரசிகர்களுக்கு படம் அதிகம் பிடிக்கலாம். மற்ற ரசிகர்களுக்கு வழக்கமான ஒரு கேங்ஸ்டர் படமாகப் பிடிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here