மின் உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு: இருளில் மூழ்கியது லெபனான்!

0

மேற்காசிய நாடான லெபனான் பல ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான லெபனானின் நாணய பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால் எரிபொருள் ஏற்றுமதியை நம்பியுள்ள லெபனான் மின்சார சபை, தற்போது பெரும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த மின்சார சபை 11,000 கோடிக்கும் அதிகமாக ஆண்டுதோறும் நட்டத்தை சந்தித்து வருகிறது

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடால் நாட்டில் இயங்கும் இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் 270 மெகாவாட் மின்சாரத்திற்கும் குறைவாகவே மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கியுள்ளது.மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் மின்சாரம் இல்லாததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

லெபனானில் இதுவரை தினமும் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை மட்டுமே மின் தடை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மின் உற்பத்தி நிறுத்தத்தால், இனி ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, ஈரானில் இருந்து எரிபொருளை லெபனான் அரசு இறக்குமதி செய்துள்ளது.

ஈராக், ஜோர்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலும் இதுபோல லெபனானில் மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here