மின்வெட்டு நேரத்தில் மாற்றம்! வெளியான புதிய அறிவிப்பு

0

நாளை (27) தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்தடை அமுலாகவுள்ளது.

அத்தோடு, ஜூலை 2 மற்றும் 3அம் திகதிகளில் CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாகவுள்ளதோடு, MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here