மின்னல் தாக்கி மரணித்த இரு மீனவர்கள்…!

0

இலங்கையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் காயமடைந்த இருவரும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கல்முனை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here