இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில் சரியாக தாலி கட்டும் நேரத்தில் மின்சாரம் தடைபட, தவறான மணமகள்களுக்கு மாப்பிள்ளைகள் தாலி கட்டிவிட்டார்கள் .
மணப்பெண்கள் இருவரும் ஒரே மாதிரி சிவப்பு நிற புடவை அணிந்திருந்தனர்.
இருவரும் முக்காடும் போட்டிருக்க, மணமகன்களும் முகத்தின் முன் பூக்களால் ஆன திரை ஒன்றை போட்டிருக்க, மொத்தத்தில் ஜோடிகள் மாறிவிட்டன.
பிறகு தவறு சரி செய்யப்பட்டுவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் அந்த இரண்டு ஜோடிகளுக்கும் மின் தடையால் தங்கள் திருமண நாளில் ஏற்பட்ட குழப்பம் குறித்த நினைவுகள் மனதிலிருந்து அகலாது என்பது குறிப்பிடத்தக்கது.