இங்கிலாந்தில் உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக விலைகள் அதிகரித்து வருகின்றன.
இங்கிலாந்தின் பணவீக்கம் மற்றும் விலைகள் உயரும் விகிதம், ஏப்ரல் மாதத்தில் 9% ஆக இருந்தது
தற்போது 12 மாதங்களில் 9.1% ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரொட்டி, தானியங்கள் மற்றும் இறைச்சிக்கான விலை உயர்வு, சமீபத்திய விலை உயர்வுக்கு ஒரு பெரிய காரணியாக இருந்ததாக ONS கூறியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான வாழ்க்கைச் செலவுகள் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் தற்போதைய பணவீக்கம் மார்ச் 1982 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.