மிக கொடூரமாக காணப்பட்ட 5 பெண்களின் சடலம்..! வெளியாகிய அதிர்ச்சி சம்பவம்

0

இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் ஒரு மாதம் முன்னர் மாயமான குடும்பத்தின் ஐவரை கொன்று வயக்காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வயக்காட்டில் 10 அடி ஆழத்தில் சடலங்களை மீட்டுள்ளனர்.

ஐவரின் கழுத்தை நெரித்து கொன்று, குழிக்குள் புதைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐந்து பேர்களின் ஆடைகளும் களையப்பட்டுள்ளது.

45 வயதான மமதா, இவரின் பிள்ளைகளான ரூபாலி(21) மற்றும் திவ்யா(14), இவர்களின் உறவினர்களான இரு பெண்கள் என மொத்தம் ஐவரின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மே 13 ஆம் திகதி இவர்கள் ஐவரும் மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட பெண்களில் ஒருவருடன் தொடர்பில் இருந்த சுரேந்திரா ராஜ்புத் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்தே இவர்கள் ஐவரையும் கொன்றிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட குடும்பம் கைதாகியுள்ள சுரேந்திராவுக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

வயக்காட்டில் ஐவரது உடலும் புதைத்த பின்னர், அவர்களின் உடைகளை மொத்தமாக எரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், சடலங்கள் மீது உப்பும் யூரியாவும் கொட்டிய பின்னர் புதைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்போது 6 பேர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்களுக்கு உதவிய இன்னும் பலர் சிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட ரூபாலியுடன் சுரேந்திராவின் காதல் விவகாரமே, தற்போது கொலையில் முடிந்துள்ளது.

சுரேந்திரா காதலியான ரூபாலியை கைவிட்டு, வேறு திருமணத்திற்கு தயாரான நிலையில், ரூபாலி பிரச்சனை செய்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில் சுரேந்திரா மொத்த குடும்பத்தையும் கொன்று புதைத்துள்ளார்

ரூபாலியின் மொபைல் அழைப்புகளை பரிசோதித்த பொலிசார், சுரேந்திராவை அழைத்து விசாரித்த போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here