மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் மணிரத்னம்!

0

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

படத்தின் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களையும் மொத்தமாக படப்பிடிப்பு நடத்து முடிப்பதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம்.

படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகர்கள் எல்லோருமே பிஸியானவர்கள். அதனால் இரண்டாம் பாகத்துக்காக அவர்களை மீண்டும் இணைப்பது சவாலானது. அதுமட்டுமில்லாமல் எல்லா நடிகர்களும் இந்த படத்துக்கு நீண்ட முடி வளர்த்துள்ளனர். அதனால் கெட்டப் கண்ட்னியுட்டி செய்வது மிகவும் கடினம் என்பதால் ஒரே அடியாக மொத்த படத்தையும் படப்பிடிப்பு நடத்த உள்ளாராம் மணிரத்னம். இதனால் ரிஸ்க் அதிகம் என்றாலும் அதிக பொருட்செலவில் முழுப் படமும் ரிலீசாக உள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here